உடபளாத்தை பிரதேச சபையின் ஏற்பாட்டில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று (27) டெல்டா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
உடபளாத்தை பிரதேச சபையின் உறுப்பினரும், இலங்கை மலையக சுதந்திர தொழிற்சங்கத்தின் செயலாளருமானமயில்வாகணம் கவாஸ்கரின் வேண்டுகோளுக்கமைய உடபளாத்தை பிரதேச சபை உறுப்பினர் பிரசன்ன வீரசிங்க இதற்கான பங்களிப்பைச் செய்திருந்தார்.
அதிபர் தேவராஜ் சொர்ணலதா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், டெல்டா வடக்கு, டெல்டா தெற்கு, டெல்டா கிழக்கு,ஸ்டெலன்பேர்க் ஆகிய தமிழ் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
