மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தமை தொடர்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, சுனில் ஹந்துநெத்தி , மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் ஆகியோரிடம் கந்தசாமி பிரபு MP விடுத்த வேண்டுகோளை அடுத்த குறித்த பகுதியில் உடனடியாக “Baily bridge” தற்காலிக பாலம் அமைக்க பணிப்புரை
மட்டக்களப்பு நகரின் பிரதான பாலங்களில் ஒன்றாக இருக்கின்ற மட்டக்களப்பு புது பாலத்தின் ஒரு பகுதி இன்று மாலை திடீரென உடைந்ததன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைபட்டுள்ளது
இது தொடர்பில் துரிதமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களோடும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி அவர்களோடும் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் மேலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலை , பாடசாலைகள் , உட்பட பல்வேறு கேந்திர முக்கியத்துவம் உள்ளக போக்குவரத்திற்கான பிரதான பாதையாக இது அமைந்துள்ள அதேவேளை இந்த திடீர் அனர்த்தம் காரணமாக வாழைச்சேனை தொடக்கம் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு துரிதமாக கொண்டு செல்லும் இடையூறு குறைவான பாதையாகவும் இது இருப்பதால் உடனடியாக இப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் ஒன்றினை அமைக்குமாறு வேண்டிக் கொண்டதற்கு அமைய தற்காலிக பாலம் “Baily bridge”ஒன்றினை அமைப்பதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டு இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு எம் பி சற்று முன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எஸ். வரதராஜன்
