நீர்கொழும்பில் சட்டவிரோத பீடியிலை பறிமுதல்

நீர்கொழும்பில் சட்டவிரோத பீடியிலை பறிமுதல் செய்யப்பட்டது.

நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 535 கிலோகிராம் பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான 14 பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் இந்தப் பீடி இலைத் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.