மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கல்

டிக்குவா புயலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை அமைச்சரினால் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் இயற்கை அனுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு தொகை தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மீனவ பயனாளிகளுக்கான நஷ்ட ஈடு தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான நஷ்ட ஈடு தொகையினை வழங்கி வைத்தார்

இதில் நான்கு பயனாளிகளுக்கு 4.5 லட்ச ரூபாய் வீதமும் 31 பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீதமும் நஷ்ட ஈடு தொகை இங்கு வழங்கி வைக்கப்பட்டது

மாவட்ட அரசாங்க அதிபர் j s. அருள்ராஜ் திணைக்கள உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பயனாளிகள் என பலரும் இவை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எஸ். வரதராஜன்