புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10இல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுடுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.