தமிழரசு உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் விசேட கலந்துரையாடல்

தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இலங்கை தமிழசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், ஏனைய பிரதேச சபையின் தவிசாளர்கள், உப தவிசாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் திங்களன்று 16.03.2026 மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத்தின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது நிலவி வரும் பல்வேறு சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்வதில் உள்ள நடைமுறைச் சவால்கள், ​பிரதேச சபைகளின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றி, நீண்டகால நிலைபேண் அபிவிருத்தியை வலுவூட்டுவதற்கான திட்டங்கள்,

பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

​இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா. ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி. சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சா. நடனசபேசன்