ஆப்கானிஸ்தான் பெண் குழந்தைகள் 6ஆம் வகுப்புக்கு மேல் கற்க கூடாது

ஆப்கானிஸ்தான் பெண் குழந்தைகள் 6ஆம் வகுப்புக்கு மேல் கற்க கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வி தொடர்பான நிலையை தெரிவிக்கும் ஆய்வறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.

அதில், பெண் குழந்தைகள் 6ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கூடாது என்று தலிபான்கள் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் திறமை இழப்பு, மிக கொடிய வறுமை, அதிகப்படியான குழந்தை திருமணங்கள் மற்றும் மீள முடியாத சேதத்தை நோக்கி தள்ளப்படுவார்கள்.

தலிபான்கள் பெண்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லவும் படிக்கவும் சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சர்வதேச அமைப்பிற்கு உறுதியளித்தனர்.

அதற்கு நேர்மாறாக 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெண்களுக்கான இடைநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன.

அதே ஆண்டு டிசம்பரில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பது தடை செய்யப்பட்டது.

இது குறித்து கேள்வி எழுப்பினால் இஸ்லாமிய சட்டம் மற்றும் இஸ்லாமிய கலாசாரம் படியே பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

மேலும் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பெண் குழந்தைகளின் கல்விதிறன் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய எழுத்தறிவு விகிதம் வெறும் 37 சதவீதம் தான் இருப்பதாகவும், பெண் சிறார்களுக்கு கல்வி கற்பிக்க தடை செய்வதால் பல ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

ஆராய்ச்சி படிப்பு மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் செல்லாது என அறிவித்த தலிபான்கள் சிறுவர்களுக்கு பெண் ஆசிரியர்கள் கற்பிக்கக் கூடாது என்ற உத்தரவையும் அறிவித்துள்ளனர்.