மட்டக்களப்புவில் கியூஆர் முறையில் கிரமமாக எரிபொருள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்

சகல எரிபொருள் நிலையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வரிசை கிரமமாக அமைதியான முறையில் தற்போது எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது

கடந்த காலங்களில் தாம் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக் கொண்டதாகவும் தற்போது அரசாங்கத்தின் இந்த QR நடைமுறை திட்டத்தின் மூலம் தமக்கு இலகுவான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதால் இதனை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வரதராசன்