அரச துறைக்கு புதன் கிழமை விசேட விடுமுறை பிரகடனம்

எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று (16) மாலை பிரகடனம் செய்துள்ளது.

தனியார் துறையினரும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

நாளை (18) புதன் கிழமை முதல் இந்த விசேட விடுமுறை அமுலுக்கு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.

எனினும், இந்த விசேட விடுமுறை சுகாதாரம், நீர் விநியோகம், துறைமுகம், சுங்கம் ஆகிய துறைகளுக்குப் பொருந்தாது என்றும் அவை வழமையோல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வி. அருள்செல்வன்