பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (23) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மஸ்கெலியா பொது விளையாட்டுத் திடலில் Compassion International Lanka – Dunkeld Project என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
இவ் விழிப்புணர்வு நாடகம் எல் கே 203 தங்கள் திட்டத்தில் உள்ள இளைஞர்கள், சிறுவர்களால் மஸ்கெலியா நகரில் நடத்தப்படுகிறது.
சிறுவர்கள் கல்வியின் அவசியம், பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் சமுதாயத்திற்குத் தேவையான ஓர் அரிய பரிசு. அவர்களுள் நாளைய உலகத்தை மாற்றக்கூடிய திறன் இருக்கிறது
ஆனால் இன்றும் பல குழந்தைகள் அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்பையும் கல்வியையும் இழந்துள்ளனர். இது ஒரு சலுகை அல்ல ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை.
குரு குழந்தை பாதுகாப்பற்ற சூழலில் வளர்ந்தால் அவர்களின் கனவுகளும் எதிர்காலமும் தடுமாறி விடும்.
அதேபோல் கல்வி என்று வாழும் குழந்தைகள் வறுமை துயரம் மற்றும் சுரண்டலின் பிடியில் சிக்கி விடுகின்றனர்.
எனவே பாதுகாப்பும் கல்வியின் இணைந்து தான் குழந்தையின் வாழ்வை உறுதி செய்கின்றன.
இதனை மக்களிடம் நினைவூட்டும் பொருட்டு எங்கள் குழுவால் ஒரு வீதி நாடகம் கவிதை மற்றும் நடைபவனி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிகழ்வு மூலம் குழந்தைகளை பாதுகாக்கும் முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் கல்வியை அளிக்கும் அவசியத்தையும் சமூகத்திற்கு உணர்த்துவதே நோக்கமாகும்.
சிறுவர் தொழில், இளம் வயது திருமணம், வன்முறை, அலட்சியம் போன்றவற்றிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே சிறுவர்கள் நாளைய எதிர்காலம் மட்டுமல்ல, இன்றைய நிஜமும் கூட.
அவர்கள் பாதுகாப்பாகவும் கல்வியுடன் வாழ்வது எங்கள் உலகத்தை ஒளிமயமாக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் கோட்பாட்டில் இலங்கை கிறிஸ்துவ திருச்சபையின் கீழ் இயங்கும் டிக்கோயா கிறிஸ்து நாதர் திருச்சபை குருவானவர் எஸ் கே டேனியல் உறுதியாக இருக்கிறார்.
மஸ்கெலியா சகல பரிசுத்தவான்களின் திருச்சபை அருட் சகோதரர் பி . லோரன்ஸ் அவர்களுடன் எல்.கே.203. திட்ட முகாமையாளர் திட்டப் பணிப்பாளர், இளைஞர்கள், சிறார்கள் பங்கேற்கின்றனர்.
பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்ச்சியில் மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா பொலிஸ் நிலையம், அரச நிறுவனங்கள் இணைந்து கொள்ளும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

