மத்துகமை நேபொடை வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (11) மாலை வந்த குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: யாழில் இருந்த யாசகர்கள் வௌியேற்றம்!
