யூரியூப்பில் தீர்ப்பு சொன்னவருக்கு எதிராக முறைப்பாடு

யூரியூபர் ஒருவர். கோப்புப் படம்: ஊடகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் யூரியூப்பில் தீர்ப்பு சொன்னவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் வழக்கறிஞர்கள் குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.

திரு. ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்படுவார் என்றும் அவர் 14 நாள் விளக்க மறியலில் வைக்கப்படுவார் என்றும் யூரியூப்பர் ஒருவர் முன்கூட்டியே ஆரூடமாகத் தீர்ப்ப சொல்லியிருக்கிறார்.

இஃது இவருக்கு எவ்வாறு தெரியும்? காவல்துறையினருடன் இவருக்குத் தொடர்பு இருக்கிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.