முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விளக்க மறியல் விதித்ததன் பின்னர் நேற்று (22) இரவு 10.45 அளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவாரா இல்லையா என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிப்பட்ட வெளிநாடடுப் பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்தியதாக திரு. விக்கிரமசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பயணம் உத்தியோகபூர்வமானது என்பதை நிரூபிக்கத் தவறியதால் அவருக்கு விளக்க மறியல் விதித்து நீதவான் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

