செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (18) நடைபெற்றன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாள்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம் (18)
புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றுள் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க: செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஜூலையில் ஆரம்பம்
இன்றைய செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்புஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 437 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
