37 வருடமாகப் பிற உயிரை காப்பாற்றி தன் உயிருக்காக போராடும் நபர்!

37 வருடமாகப் பிற உயிரைக் காப்பாற்றியவர் தன் உயிருக்காகப் போராடுகிறார்!

பொகலந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் மாவட்ட மருத்துவமனை இயக்குனர், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிக்கு, மின்சார மோட்டார்கள் மூலம் இயங்கும் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த நோயாளி, பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையைச் சேர்ந்த விஜயபால மானவடு என்ற 69 வயதுடையவர் ஆவார். சுகாதார சேவையில் பணியாற்றி வரும் இவர் கடந்த 37 வருடங்களாகப் பல வைத்தியசாலைகளில் பணி புரிந்து பலரின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளார்.

இவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் ஆக்சிசன் இயந்திரத்தைப் பெற்றுக் கொள்ள பொது மக்களின் உதவியை நாடியுள்ளார். உதவ முன் வருவோர் இந்தக் கையடக்க தொலைப்பேசியுடன் தொடர்பு கொள்ளவும் 077 342 7353

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்