இந்தியாவிலிருந்து 38,000 மெட்.தொன் எரிபொருள் இலங்கை வந்தது

இந்தியாவிலிருந்து 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இன்று (28) கொழும்புவை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் நடத்திய தொலைபேசி உரையாடலையடுத்து இந்த எரிபொருள் தொகை நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல், 18 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் இன்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.