பழம்பெரும் திரைப்பட நடிகை பத்மஶ்ரீ சௌகார் ஜானகி (சங்கரமாஞ்சி ஜானகி) தனது 94 ஆவது வயதில் நேற்று (21) காலமானார்.
இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர். ஏழு தலைமுறைகளுக்கும் மேலான தமது கலைப்பயணத்தில், ஜானகி ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் 300-இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, தமது தொடக்க காலத்தில் வானொலிக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஶ்ரீ ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவரின் இளைய தங்கையான கிருஷ்ண குமாரியும் புகழ்பெற்ற நடிகையரில் ஒருவர்.
