காலி கடற்பரப்பில் ஈரான் எண்ணெய் கப்பல்கள்!

காலி கடற்பரப்பில் ஈரான் எண்ணெய் கப்பல்கள் தரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் கடும் தடைகளால், பத்துக்கும் மேற்பட்ட ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் இலங்கையின் தென் மேற்குக் கடறப்பரப்பில் நிலைகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலியிலிருந்து சுமார் 12 கடல்மைல் தொலைவில் சில கப்பல்கள் வாரக்கணக்காகவும் சில ஒரு மாதத்திற்கு மேலாகவும் நிலைகொண் டிருப்பதாகத் தெரியவருகிறது.

ஈரான் மீதான தடை குறித்து அமெரிக்காவிடமிருந்து முறையான அறிவித்தலை எதிர்பார்த்திருப்பதாக துறைமுக, கப்பற்றுறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தி மோர்னிங் செய்தியின்படி 16 கப்பல்கள் இவ்வாறு காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.