கோவில் திருவிழாவில் கண் பாதிப்பு: 375 பேருக்கு சிகிச்சை

கோவில் திருவிழாவில் கண் பாதிப்பு ஏற்பட்ட 375 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண் பாதிப்புக்குள்ளான 375 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

சிகிச்சைக்குப் பின்னர் கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போது வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

வீடு திரும்பியவர்கள், வைத்தியசாலையால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்கு அமைய முறையாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.