இன்றைய வானிலை முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதற்கமைய பல்வேறு இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல்,சபரகமுவை மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பாறை, மொனராகலை,மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
