22இற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
நீதியரசர்களினதும் நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவதற்கான அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்திற்கு, இதுவரை நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இலங்கை தமிழரசுக் கட்சி அதன் முடிவை இப்போது அறிவித்திருக்கிறது.
சட்டமூலத்தை நிறைவேற்றுவதென்றால், சர்சஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடம் முடிவெடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் முடிவு குறித்து அதிர்ச்சியடைந்துள்ள அரசாங்கம், அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதாக வடக்கு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. (மதிமுரசு)
