இரத்மலானையில் மெட்ரோ பஸ் டிப்போ திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நகர்ப்புற போக்குவரத்து சேவையை மேலும் திறம்பட முன்னெடுக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மெட்ரோ பஸ் சேவையின் 4ஆவது டிப்போ நேற்று (21) இரத்மலானையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பஸ் சேவையின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மெட்ரோ டிப்போ திட்டத்தின் கீழ் இந்த புதிய டிப்போ நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக தலங்கம, கடவத்தை மற்றும் சோலோ ஆகிய பகுதிகளில் டிப்போ யார்ட்கள் செயற்பட்டு வரும் நிலையில், ரத்மலானை டிப்போவும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை டிப்போவை மையமாகக் கொண்டு கொழும்பு நகர போக்குவரத்து சேவைக்காக 30 புதிய மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும், மெட்ரோ டிப்போ திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகமையில் அமைக்கப்படும் 5ஆவது டிப்போ 2027 ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
