உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 9பேர் விடுதலை செய்யப்பட்டுப் 15 பேருக்குத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பு வழங்கியுள்ளது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சுமார் 23 ஆயிரத்திற்குமதிகமான குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வழக்கில் 9 பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்தன.
