லிட்ரோ காஸ் விலை நிள்ளிரவு முதல் குறைகிறது

லிட்ரோ காஸ் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாயால் குறைக்கப்படுகிறது. புதிய விலை 4,365 ரூபாயாகும்.

ஐந்து கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 1,750 ரூபாய்.

2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 815 ரூபாய். (மலைக்குருவி)