செங்கலடி ராஜபுரம் கிராம குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லினோ தாக்கத்தினால் செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்கு அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது இங்கு ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை தீர்க்க நீர் வளங்கள் அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக நேற்று பிற்பகல் ராஜபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அங்கு பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகளை கேட்டு அறிந்து கொண்டதுடன்
எதிர்காலத்தில் இதற்குரிய நிரந்தர தீர்வுகளை காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்காக பிரதேச செயலகங்களுடாக அதனை வழங்க அதற்குரிய நிதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் இங்கு கருத்து தெரிவித்தார்



பாராளுமன்ற உறுப்பினரின் இந்த கள ஆய்வு விஜயத்தின் போது செங்கலடி பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுதாகரன் மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்கள் இப் பகுதி க்கான கிராம சேவையாளர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்
பாராளுமன்ற உறுப்பினரிடம் இப் பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் இதனை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை கட்டங்கட்டமாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்
மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்
