மட்டக்களப்பு புதுப்பாலம் இன்று (10) காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக இன்று காலை முதல் திறந்துவைக்கப்பட்டதையடுத்து வழமை போல் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் துரித முயற்சியினால் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணிகள் நேற்று மாலை (09)முடிவடைந்தன.



இன்று காலை 9 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது
இதையும் படியுங்கள்: கதிர்காமக் காட்டுப் பாதை இன்று காலை திறப்பு
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்தத் தற்காலிக மட்டக்களப்பு புதுப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது
இருப்பினும் இந்த வீதியினைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இப்பாலத்தின் ஊடாக மிகவும் அவதானமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
வழமை போன்று புதிய பாலம் ஒன்று நிரந்தரமாக அமைக்கப்படும் வரை கனரக வாகனங்கள் இப்பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபை உறுப்பினர் எம் உதயராஜ் பிரஜா சக்தி உறுப்பினர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
எஸ்.வரதராஜன்
