புதுப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரை இணைக்கும் பிரதான பாலங்களில் ஒன்றாகக் காணப்படும் புதுப்பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் கடந்த சில தினங்களாக இந்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் போக்குவரத்திற்குப் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்
இரணடாகப்பிளந்த புதுப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினரின் துரிதமான முயற்சியினால் தற்போது மீண்டும் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்த வேண்டுகோளின் பேரில் தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைகள்.போக்குவரத்து அமைச்சினால் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தலைமையில் தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் காலங்களில் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த சேதம் அடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று நிர்மாணிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வி. சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



