மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது

மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது

பிரதானமாக வைத்தியசாலை, விமான நிலையம் ,சிசிலியா பாடசாலை, செல்பவர்கள் பயன்படுத்தும் பிரதான விதியை இணைக்கும் பாலமாக இருந்த புதுப்பாலம்,நீரின் ஓட்டம் காரணமாக நேற்று (28) மாலை தாழ் இறங்கி இரண்டாக உடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், சனப் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை..

இதன் காரணமாக இந்தப் பாலத்தின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பிரயாணிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்தப் பாதைதயை இணைப்பதற்கு பெய்லி பாலம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கௌசல்யா