மின் தடையால் 12 மணித்தியால நீர்வெட்டு அமுலாகும் என அறிக்கப்பட்டுள்ளது.

12 மணித்தியாவ நீர்வெட்டு கொழும்புவிலும் புநகர்ப் பகுதிகளிலும் நாளை (04) அமல்படுத்தப்படுகிறது.

கொழும்புவின் புநகர்ப் பகுதிகளான தெகிவளை, கல்கிஸை, இரத்மலானை, ராவத்தாவத்தை ஆகிய பகுதிகளில் நாளை (04) 12 மணித்தியால நீர்வெட்டு அமல்படுத்தப்படுவதாகத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமல்படுத்தப்படும்.

இதற்கு முன்பு கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோக்கந்தறை, கொஸ்வத்தை, தலவத்துகொடை, ஶ்ரீ ஜயவர்தனபுரம் கோட்டே, இராஜகிரி, மிரிஹானை,மாதிவலை, நுகேகொடை,நாவலை, கொலண்ணாவை, ஐடிஎச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, கடுவலை, மகரகமை, பொரலஸ்கமுவை, பிலியந்தலை ஆகிய பகுதிகளில் இதே காலப் பகுதியில் நீர்வெட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகக் கட்டமைப்பில் திருத்தப் பணிகள் காரணமாக, நீர்வெட்டு அமல்படுத்தப்படுவதாக சபை அறிவித்துள்ளது.