நெல்லுக்கு விலை கூட்டினால் அரிசியின் விலை அதிகரிக்கும் என்பதே உண்மை

அரிசியின் விலை அதிகரிக்கும் ஆதலால் விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய சங்கங்களுடன் ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றபோது அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக நெல்லுக்கான நிர்ணய விலையை 120 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதேவேளை அவர்களுக்கு மானியத்தின் ஊடாக மேலதிக நிவாரண தொகைகளை வழங்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

அவர்கள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தாலும்,இறுதியில் பாவனையாளர் மக்களே பாதிக்கப்படுவார்கள்.

நெல்லின் விலையை அதிகரிக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கும். அவை மக்களுக்கான சுமையாக மாறிவிடும்

எனவே, விலையை அவ்வாறு வைத்து, விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஏற்ப அவர்களுக்கான மானியத் தொகை வழங்கப்பட உள்ளது

கடந்த கால ஆட்சியிலே அனைத்து துறைகளிலும் ஊழல் காணப்பட்டது. அவை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது அரசாங்க காலத்தில் எதுவித ஊழல்களும் இடம்பெற வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் சரியாக வடிவமைக்கப்பட்ட ஊழல் இல்லாத அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

தற்போது நமது அரசாங்கத்தில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்

எஸ். வரதராஜன்

புதுப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் பிரபு எம்பியால் ஆரம்பித்துவைப்பு