துறைநீலாவணை முத்துமாரி அம்மன் வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு வைபபம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்றது.
ஆலய வடாந்த உற்சவமானது கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஏழு தினங்கள் அம்மன் உற்சவம் இடம்பெற்று வெள்ளிக்கிழமை இன்று தீமிதிப்பு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
தீமிதிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை அம்மனுடைய விநாயகர் பானை ஏற்றும் நிகழ்வு இடம்பெற இருக்கிறது.
ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பொங்கல் பானைகள் ஏற்றப்பட்டு சர்க்கரை அமுது படைக்கும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சா. நடனபேசன்
திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேட்குடா பிள்ளையார் ஆலய கும்பாபிஷம்




