இன்று இடம்பெற்ற அத்துருகிரியா கோவின்னை விபத்தில் 20 பேர் காயம்

அத்துருகிரியா கோவின்னை விபத்தில் 20பேர் காயமடைந்துள்ளனர்.

கொடகமை – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரியா, கோவின்னை மாவத்தைக்கு அருகில் பஸ்ஸும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (17) அதிகாலை 4.15 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க: முன்னாள் ஐஜிபி விக்ரமரத்தின துப்பாக்கிச் சூட்டில் பலி!

விபத்தினால் போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடைப்பட்டிருந்தது.விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான சுமார் 20 பேர் ஒருவலை, ஹோமாகமை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி சிக்கிக்கொண்ட நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேர முயற்சிக்கு பின்னரே அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தினால் டிப்பர் வாகனத்திற்கும் பஸ் வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக்கில் பின்தொடர