பட்டடிப்பளை மகிழடித்தீவு கட்டுப்பத்தை வீதி பாலம் அமைக்க அடிக்கல்

மகிழடித்தீவு கட்டுப்பத்தை வீதி பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மகிழடித்தீவு கட்டுப்பத்தை வீதி காணப்படுகின்ற

சிறிய மதகு சுமார் 3.7 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டினார்..

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இ. திரேச குமார் தலைமையில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வில்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன் பட்டிப் பளை பிரதேச செயலாளர் எஸ் சுதாகர் பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்

மேலும் வாசிக்க: மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் தேசிய திட்டம்