சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இந்திய மானியத்தின் கீழ் உயர்த்தப்பட்ட நிதியுதவியை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (ஜூன் 02) வழங்கினார். இத்திட்டம் 2025-26 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.
முன்னதாக, 2023-24 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் இந்திய மானியத்தின் கீழ் ஒரு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், பொருளாதாரப் பின்னணி மற்றும் கல்விச் செயல்திறனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு மாதம் 5000 இலங்கை ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் பயன்பாடு குறித்துப் பெறப்பட்ட நேர்மறையான கருத்துகளையும் பல்கலைக்கழக அதிகாரிகள்,மாணவர்களிடமிருந்து இத்திட்டத்தை நீட்டிக்கக் கோரிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசமுறைப் பயணத்தின் போது, கிழக்குப் பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக உயர்த்தப்பட்ட இத்திட்டத்தை இந்தியா செயல்படுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


