நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் அசோகவன அனுஶ்ரீ தியான மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஆலயத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வி. எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை பத்து மணிக்குத் தியான மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக விவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனுஸ்ரீ ஜெயின் குப்தா குடும்பத்தினரின் நன்கொடையின் கீழ் நிருமாணிக்கப்பட்ட தியான மண்டபம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. எஸ் சரண்யா, பிரதி உயர்கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குரு மா சுபா திதி அவர்களும் அவர்களது குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
அசோகவன அனுஶ்ரீ தியான மண்டபம் திறப்பு விழாவில் பெருதிரளான பக்தர்கள் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும்.




மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
படங்கள்: இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு
