WhatsApp Image 2026-05-21 at 08.17.53

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனியா சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு. விமலநாதன் தலைமையில் அப்பாடசலையில் இடம்பெற்றது.

அப்பாடசாலையின் அதிபர் சுவிஸ் உதயம் அமைப்பிடம் ; வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ்வுதவியினை சுவிஸ் உதயம் அமைப்பு வழங்கியது.

இந்நிகழ்வில் சுவிஸ் உதம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூக சேவகர் க. துரைநாயகம், செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், பொருளாளர் கருஸ்ராஜ், உபதலைவர் ஒய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன், பிரதிச்செயலாளரும் ஊடகவியலாளருமான சா. நடனசபேசன், உறுப்பினர்களான அதிபர் இ.ஜீவராஜ் கண்ணன், பாடசாலையின் அதிபர் கே.ராமநாயக்கா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.