நாட்டின் பல பகுதிகளில் மழை; பலத்த காற்று

நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (21) மேல், சப்பிரகமுவை, வடமேல் மாகாணங் களிலும், காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவை மழை பெய்யக்கூடும்..

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.