இன்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில தடவை மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாலை வேளையிலோ இரவிலோ சில இடங்களில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

