பாடகி தீயின் தனிப்பாடல் கொழும்புவில் வெளியீடு

புகழ்பெற்ற பாடகி தீயின் புதிய தனிப்பாடலான “வாரி வாரி” (Vary Vary) வெளியீட்டு விழா, இன்று (2026 ஏப்பிறல் 24) கொழும்புவில் சினமன் லைப் (Cinnamon Life) நட்சத்திர விடுதியில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இலங்கை, இந்தியக் கலைஞர்களின் கலைத்துவப் பாலமாக அமைந்த இந்நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் கௌரவ விருந்தினர்களாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஆகியோர் பங்கேற்றனர்.

“என்ஜாய் எஞ்சாமி” போன்ற உலகளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்ற படைப்புகளைத் தொடர்ந்து, தீயின் தனித்துவமான குரலிலும் பாணியிலும் வெளியாகியுள்ள இந்த “வாரி வாரி” பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.