தென் பகுதி ரயில் சேவை சீராக இரண்டு நாளாகும்

சாகரிக்கா ரயில் சேதப்படுத்திய தண்டவாளத்தைச் சீர்செய்ய இரண்டு நாளாகும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.

இன்று 2026 ஏப்பிறல் 24 ஆம் திகதி பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி வந்த சாகரிக்கா ரயில் வாத்துவை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது.

இதனால், கரையோர ரயில் மார்க்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் பகுதிக்கான ரயில் சேவை பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சேதமான இந்தத் தண்டவாளத்தைச் சீர்படுத்த இரண்டு நாள் தேவைப்படும் என்று திரு.பத்மபிரிய தெரிவித்துள்ளார்.