திருமலையில் பஸ் விபத்தில் 22 பயணிகள் காயம்

திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி ஏ-15 வீதியில் பயணித்த பஸ் ஒன்று கங்கைத்துறை பாலத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்தபோது பஸ்ஸில் 35 இற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.இதில் பஸ்ஸின் சாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கெளசல்யா