இரத்தினபுரி புளுங்குப்பிட்டி பொதுச் சந்தையில் தீவிபத்து

இரத்தினபுரி புளுங்குப்பிட்டியிலுள்ள பொதுச் சந்தையில் இன்று (23) காலை தீவிபத்து ஏற்பட்டது.

இதில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தப் பகுதியில் உள்ள பெரிய மளிகைக் கடையொன்றும் தீப்பிடித்து எரிந்தது.

இன்றைய சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இரத்தினபுரி எஸ். ஆர்.இரவீந்திரன்