மலையகத்தில் களைகட்டும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

மலைகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மாலை வேளைகளில் இடைக்கிடை கடும் மழை பெய்திருந்தாலும், பொதுமக்கள் தமது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவசியமான பொருள்களை வாங்குவதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதை நேற்று (12) மாலை காண முடிந்தது.

அத்தியாவசிய உணவுப்பொருள்கள், ஆடை அணிகள், பட்டாசு வகைகள், மரக்கறி வகைகள் தாராளமாக வியாபார நிலையங்களின் வெளிப்புறத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

மரக்கறி வகைகளின் விலைகள் மலிவாகக் காணப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கண்டி, கம்பளை, புசல்லாவை, மடவளை, மாத்தளை, வத்துகாமம், பன்விலை போன்ற பகுதிகளில் மக்கள் அதிகளவில் நுகர்வுப் பொருள்களைக் கொள்வனவு செய்ததைக் காணமுடிந்தது.

பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து நடைமுறைகளையும் சிறப்பாகப் பேணுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

பன்விலை நிருபர் ம. நவநீதன்