பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் பொலிஸில் சரண் அடைந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த நபர், கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்தார்.
மேலதிக விசாரணைக்காக அவர் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி தோட்டத்தை சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன், கம்பளை, புசல்லாவை பகுதியில் 9 மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி தனது சட்டபூர்வ கணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார் எனவும், அங்கிருந்து சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பெண் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார் எனவும், அதற்கு இந்த நபர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் நேற்று 22 ஆம் திகதி பாழடைந்த பங்களாவுக்குள் அவரை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற வேளையிலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் பொலிஸில் சரண் அடைந்த தகவலறிந்த நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவ ருகின்றனர்.

