கல்லடி பாலத்தில் பாய்ந்த நபர் சடலமாக மீட்பு

இன்று நண்பகல் மட்டக்களப்பு தலைமையாக போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பாலத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கு அவ் வீதியால் பயணித்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் பெயரின் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 2 நன்னீர் மீன்பிடியாளர்களின் உதவியுடன் சடலம் பிற்பகல் ஒரு மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது

அப்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதேவேளை உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிள் பாலத்தில் இருந்து மீட்கப்ப்பட்டுள்ளது

இச்சம்பவம் சம்பந்தமாக மட்டக்களப்பு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு வரதராசன்