கல்வி அதிகாரிகள், அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்றைய தினம் இடம் பெற்ற சேவை நலன் பாராட்டு விழா திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர், இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகியோரை வாழ்த்தி அவர்களுக்கு வாழ்த்துப்பாவினை ஆலையடி வேம்பு அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக கடமை யேற்ற ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆலையடி வேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர், கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

சா. நடனசபேசன்