குருந்தூர் மலை முதல் சிவனொளி பாத மலை வரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் இருந்து பௌத்த துறவிகள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்கின்றனர்.

கடந்த 14.03.2026 அன்று குருந்தூர் மலையில் இருந்து ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மத குரு தலைமையில் துறவிகள் அறுவரும் அப் பகுதியில் உள்ள 10 பேர் அடங்கிய சிவில் சமூகமும் நடை பவனி சிவனொளிபாத மலைக்கு யாத்திரை ஆரம்பித்து.
நேற்று இரவு அம்பகமுவை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையை வந்தடைந்தனர். அங்கு இரவு தங்கியிருந்து இன்று காலை மீண்டும் யாத்திரையை ஆரம்பித்து சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள கிரீன் வீவ் விடுதியில் தங்கியுள்ளனர் நாளை 18 ஆம் திகதி அதிகாலையில் மலையேறுகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்