ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தனது அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என்று ஈரான் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் உலக எரிசக்தி சந்தை ஆட்டம் கண்டது.
நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக அதிபர் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உதவி செய்யும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா நட்பு நாடுகளாக இருக்கும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் தனது நீர்மூழ்கி போர்க் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணைக்கு அனுப்ப விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளன.
இது அதிபர் டிரம்ப்புக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
“சில நாடுகள் உதவ முன்வந்துள்ளன, சிலர் பின்வாங்கியுள்ளனர். அமெரிக்கா சில நாடுகளுக்குப் பல ஆண்டுகளாக உதவியுள்ளது ஆனால் இப்போது அவர்கள் துணையாக இல்லை,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
