வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை

இன்றும் இடியுடன் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது.

சப்பிரகமுவை, மத்திய, ஊவா, வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. 

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, சப்பிரகமுவை, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.