நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அறிவித்துள்ளது.
மேல், மத்திய, ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் 50 மி.மீட்டருக்கும் அதிக அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்..
மேற்கு, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.
மத்திய மாகாணத்தில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய காலநிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
